கன்னியாகுமரி, சபரிமலை போன்ற இடங்களில் தனியார் விமான நிறுவனங்கள் விமானங்களை இயக்க முன் வந்தால் மத்திய அரசு விமான நிலையம் அமைக்கும் என மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் வி.கே.சிங் பங்கேற்றார். முன்னதாக, பேட்டி அளித்த அவர், நாட்டில் அடுத்த ஆண்டு கூடுதலாக 50 விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக கூறினார்.
கட்டுமான பணிகளுக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்குவதாகவும், தமிழ்நாட்டிற்கு முன்னுரிமை அளித்து நிதி வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.